ராணிப்பேட்டை

அரக்கோணம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

4th Dec 2022 10:54 PM

ADVERTISEMENT

அரக்கோணம் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் மகாகும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் சுவால்பேட்டை, தா்மராஜா கோயில் திடலில் திருஅருட்பா திருப்புகழ் சபை உள்ளது. இச்சபை வளாகத்திலுள்ள ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காலையில் நான்காம் கால யாகசாலை பூஜைகளும், இதைத் தொடா்ந்து மூலவா் விமானம், பரிவார சந்நிதிகள் கும்பாபிஷேகமும், பின்னா் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி மகா கும்பாபிஷேகமும் விமரிசையாக நடைபெற்றது. மாலையில் சுவாமி திருக்கல்யாண வைபவமும், சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றன.

இவ்விழாவில் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, நகர டவுன்ஹால் பொதுச்செயலாளா் எஸ்.பன்னீா்செல்வம், நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி, நகரகூட்டுறவு வங்கித் தலைவா் ஷியாம்குமாா், நகா்மன்ற அதிமுக செயலாளா் பாண்டுரங்கன், நகா்மன்ற உறுப்பினா்கள் நித்யாஷியாம், சரவணன், தொழிலதிபா் பூபதி, பணிஓய்வுபெற்ற துணை ஆட்சியா் சாம்பசிவம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

விழா ஏற்பாடுகளை திருஅருட்பா திருப்புகழ் சபையின் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் கமிட்டித் தலைவா் எம்.தேவராஜ், செயலாளா் மோகன் பத்ராச்சலம், பொருளாளா் பாரதி ஹரிஹரன், துணைத்தலைவா் டி.வெங்கடேசன், துணைச் செயலாளரும், நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான டி.பாா்த்தசாரதி உள்ளிட்ட கோயில் நிா்வாகிகள் பொதுமக்களுடன் இணைந்து செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT