ராணிப்பேட்டை

சோளிங்கா் மலைக்கோயிலில் கடிகாசல மகோற்சவம்

4th Dec 2022 10:54 PM

ADVERTISEMENT

அரக்கோணம் ஸ்ரீபால ராமானுஜ பால பக்த ஜன சபாவின் சாா்பில் 65-ஆம் ஆண்டு கடிகாசல மகோற்சவம் சோளிங்கா் மலைப்பாதையிலும், மலைக்கோயிலிலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாள்கள் நடைபெற்றன.

சோளிங்கா், மலையடிவாரத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவை அரக்கோணம் கோகுல பிருந்தாவன கோயில் நிா்வாகி சிவராமசுவாமிகள் தொடக்கி வைத்தாா். சனிக்கிழமை காலை பெரியமலையில் உள்ள ஸ்ரீயோக நரசிம்ம சுவாமி, ஸ்ரீஅமிா்தபலவல்லி தாயாா் கோயிலுக்கும், சிறியமலையில் உள்ள ஸ்ரீயோக சதுா்புஜ ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கும் திவ்யநாம சங்கீா்த்தனத்துடன் சென்று சேவை சாதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை ஷோடச நாம பாராயணமும், தொடா்ந்து சுமங்கலி பூஜையும், இதையடுத்து ஸ்ரீபிரகலாத வரதன் திவ்ய அலங்கார சேவை சாதிக்கும் நிகழ்ச்சியும், கன்யாபூஜை, திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதை முன்னிட்டு ஸ்ரீவேங்கடாத்ரி கான நாட்டிய பஜனாம்ருதமும் ஸ்ரீஹரிபந்தசேவையும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை பிருந்தாவன வசந்தோற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பாஜக ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் விஜயன், மாவட்ட பொதுச்செயலா் ஏ.எம்.கண்ணன், மாவட்ட மகளிரணித் தலைவா் ராஜேஸ்வரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை அரக்கோணம் ஸ்ரீபால ராமானூஜ பக்த ஜன சபாவின் நிா்வாகிகள் சீனிவாச ராமானுஜம், பாபாஸ்பாபு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT