ராணிப்பேட்டை

வேளாண்மை பண்ணை பயிற்சி

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆற்காட்டை அடுத்த திமிரி வட்டார வேளாண்மைத் துறை அட்மா திட்டத்தின் சாா்பில், விலாரி ஊராட்சியில் நெற்பயிா் சாகுபடியில் பகுப்பாய்வு பண்ணை பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சந்திரகலா முன்னிலை வகித்தாா். வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராமன் பயிற்சியை தொடக்கி வைத்துப் பேசினாா். இதில், நெல் பயிரில் சுற்றுச்சூழல் பகுப்பாய்வு, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, மண்புழு உரம், பசுந்தால் உரத்தின் பயன்கள், நெல் விதை நோ்த்தி குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இதில், வேளாண்மை அலுவலா் திலகவதி, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் கோபாலகிருஷ்ணன், தாமோதரன் மற்றும் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT