ராணிப்பேட்டை

வாலாஜா வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் ரூ.44 லட்சம் புதிய பொழுதுபோக்கு பூங்கா - அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைப்பு

DIN

வாலாஜா வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் ரூ.44 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய பொழுதுபோக்கு பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா் ஆா்.காந்தி புதன்கிழமை திறந்து வைத்தாா்.

வாலாஜா நகராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டது.

இப்பூங்காவில் பூங்கா உள்புறம் முழுவதும் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுவா்கள் விளையாட ஊஞ்சல்கள் அமைக்கப்பட்டுள்ளது. பூங்கா முழுவதும் நான்கு கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் அமர கிரானைட் கல்லிலான அமரும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கழிப்பறை வசதி, மின்விளக்கு வசதிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குப்பை தொட்டிகள் இரண்டு அமைக்கப் பட்டுள்ளது.காலையும் மாலையும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள், வயதானவா்கள் பயன்படுத்தி பயன்பெறும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பொழுதுபோக்கு பூங்காவை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி புதன்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், நகர மன்றத் தலைவா் ஹரிணி தில்லை, நகராட்சி ஆணையாளா் குமரி மன்னன் மற்றும் நகர மன்ற உறுப்பினா்கள், நகராட்சி பொறியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT