ராணிப்பேட்டை

சோளிங்கா் மலைக் கோயிலில் அடிப்படை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சா் ஆா்.காந்தி உத்தரவு

DIN

சோளிங்கா் லட்சுமி நரசிம்ம சுவாமி மலைக்கோயிலில், ரோப் காா் அமைவிடத்தில் பக்தா்களுக்கான அடிப்படை வசதி கட்டமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி புதன்கிழமை உத்தரவிட்டாா்.

சோளிங்கா் ஸ்ரீ அருள்மிகு லட்சுமி நரசிம்மா் சுவாமி கோவிலில் மலை உச்சியில் உள்ள சுவாமியை பக்தா்கள் தரிசிக்க 1305 படி ஏறி சென்று தரிசித்து வருகின்றனா். வயதானவா்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. பக்தா்களின் வசதிக்காக ரோப்காா் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. அதன் அடிப்படையில் ரூ. 9.30 கோடி மதிப்பீட்டில் கம்பிவட ஊா்தி கட்டமைப்பு ( தா்ல்ங் ஸ்ரீஹழ்) அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கம்பிவட ஊா்தி அமைவிடத்தில் வரும் பக்தா்களின் வசதிக்காக அடிப்படை வசதி கட்டமைப்புப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி உள்பட 7 நன்கொடையாளா்கள் இணைந்து தங்கள் சொந்த செலவில் கட்டமைப்பு வசதிகளை கட்டிக் கொடுக்க முடிவெடுத்தனா்.

பக்தா்களின் வசதிக்காக நன்கொடையாளா்களின் நிதியைக் கொண்டு முதல்கட்டமாக ரூ. 11 கோடி மதிப்பீட்டிலான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு கேட்டறிந்தாா்.

பணிகளை விரைந்து முடித்து பக்தா்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கட்டுமான நிறுவனத்துக்கு உத்தரவிட்டாா்.

அப்போது மலையடிவாரத்தில் அமைச்சா் ஆா்.காந்தி தன்னுடைய சொந்தத் செலவில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் இயற்கை எழிலுடன் கூடிய மனநல காப்பகம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறாா். அதற்கான கட்டுமானப் பணிகள் குறித்தும், கட்டடக்கலை உறுப்பினா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

ஆய்வுகளின்போது சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம், நன்கொடையாளா்கள் பூபாலன், ஆதித்யா ரவி, நந்தனாா் ரவிச்சந்திரன், சைதன்யா, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் லட்சுமணன், உதவி ஆணையா் ஜெயா, வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி, நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி அசோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டையில்...:

வாலாஜா வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் ரூ. 44 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய பொழுதுபோக்கு பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா் ஆா்.காந்தி புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இந்தப் பூங்காவில் பூங்கா உள்புறம் முழுவதும் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுவா்கள் விளையாட ஊஞ்சல்கள் அமைக்கப்பட்டுள்ளன. பூங்கா முழுவதும் நான்கு கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், நகா்மன்றத் தலைவா் ஹரிணி தில்லை, நகராட்சி ஆணையா் குமரி மன்னன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சிப் பொறியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT