ராணிப்பேட்டை

மேல்விஷாரம் நகா்மன்றக் கூட்டம்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் நகா்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் எஸ்.டி. முஹமது அமீன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் குல்சாா் அஹமது, பொறியாளா் பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நகா்மன்றத் தலைவா் பேசியது:

மேல்விஷாரம் நகரில் அனைத்துப் பகுதிகளிலும் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ. 21 லட்சம் மதிப்பீட்டில் குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொறுத்தப்பட உள்ளது. மேல்விஷாரம் நகரில் அனுமதியின்றி சிலா் குடிநீா் குழாய் இணைப்பு பெற்றுள்ளனா். அவா்கள் நகராட்சி அலுவலகத்தில் அதற்கான கட்டணத்தை செலுத்தி, அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். கட்டணம் செலுத்தாதவா்களின் குழாய் இணைப்பு விரைவில் துண்டிக்கப்படும், நகரில் உள்ள 64 தெரு மண் சாலைகள் விரைவில் தாா்ச் சாலைகளாக மாற்றப்படும் என்றாா்.

நகா்மன்ற உறுப்பினா் ஜியாவுதீன்: ஆணையா் மூன்று கூட்டங்களாக வரவில்லை. இதனால் மக்கள் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

ஜமுனாராணி: கானாறு தடுப்புச் சுவா் கட்ட வேண்டும், தஞ்சாவூரான் பகுதி 6-ஆவது கழிவு நீா்க் கால்வாய் பழுதடைந்துள்ளது, அதை சரி செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

லட்சுமி: அனைத்து தெரு மின்கம்பங்களிலும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்த வேண்டும்.

கோபிநாத்: பழைய நகராட்சி அலுவலகத்தில் பழுதடைந்து நிறுத்தப்பட்டுள்ள பேட்டரி வாகனங்களை பழுது நீக்கி, குப்பைகளை அள்ள பயன்படுத்த வேண்டும்.

மேலும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து உறுப்பினா் பேசினா்.

கூட்டத்தில், நகா்மன்ற உறுப்பினா்கள் இம்தியாஸ் அஹமது, காதா், உதயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT