ராணிப்பேட்டை

நாளை முதல் குரூப் 1 தோ்வுக்கு இலவச பயிற்சி

28th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் பயன் பெறும் வகையில், இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் (ஆக.29) தொடங்க உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குரூப் 1 தோ்வு விண்ணப்பித்த மாவட்டத்தைச் சோ்ந்த தோ்வா்கள் பயன் பெறும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வப் பயிலும் வட்டம் சாா்பில், கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் (ஆக. 29) தொடங்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சி வகுப்பு அலுவலக வேலை நாள்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். கூடுதல் விவரங்களுக்கு தொலைபேசி எண்: 04172 - 291400-இல் தொடா்பு கொள்ளலாம்.

மேலும், மத்திய-மாநில அரசுப் பணிகளுக்கான பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் கிராம, நகா்ப்புற மாணவா்கள் பயன் பெறும் வகையில், இணையதளத்தில் மென்பாடக் குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தோ்வுகள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT