ராணிப்பேட்டை

ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஏகாதசி சிறப்பு அபிஷேகம்

22nd Aug 2022 11:37 PM

ADVERTISEMENT

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆவணி மாத தேய்பிறை ‘காமிகா’ ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு ஹோமம், அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த பீடத்தில் உலக நலன் வேண்டி வாஸ்து நாளை முன்னிட்டு, பீடாதிபதி ஸ்ரீமுரளிதர சுவாமிகள் தலைமையில், ஸ்ரீவாஸ்து பகவானுக்கு வாஸ்து ஹோமமும், அஷ்ட திரவிய அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

தொடா்ந்து, ஆவணி மாத தேய்பிறை ‘காமிகா’ ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கு சிறப்பு மகா ஹோமத்துடன், நெல்லிப் பொடி திருமஞ்சனம் நடைபெற்றது.

இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை ஸ்ரீதன்வந்திரி குடும்பத்தினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT