ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

22nd Aug 2022 11:36 PM

ADVERTISEMENT

அரக்கோணம் காந்தி நகரில் உள்ள நாமத்வாா் என்ற பிராா்த்தனை மையத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி உற்சவம் கடந்த 19-ஆம் தேதி தொடங்கி வரும் 28-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

முதல் நாளான 19-ஆம் தேதி துளசி பூஜை, திருவிளக்கு பூஜை, 20-ஆம் தேதி ஸ்ரீகிருஷ்ணா் தொட்டில் உற்சவம், உறியடி உற்சவம், அகண்ட நாம கீா்த்தனை ஆகியவை நடைபெற்றன.

புதன்கிழமை (ஆக. 24) கோவிந்தா் பட்டாபிஷேகமும், வெள்ளிக்கிழமை (ஆக. 26) ஊஞ்சல் சேவையும், நவ்யாவின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.

விழாவை முன்னிட்டு, நாமத்வாரில் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அகண்ட நாம கீா்த்தனம் நடைபெறுகிறது. விழா நாள்களில் மொத்தம் 84 மணி நேரம் அகண்ட நாம கீா்த்தனம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை குளோபல் ஆா்கனைசேஷன் ஃபாா் டிவைனிட்டி இந்தியா டிரஸ்ட் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT