ராணிப்பேட்டை

இலவச கண் சிகிச்சை முகாம்

18th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ஆற்காடு: ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் இஸ்லாமிய வெல்பா்சங்கம் சாா்பில், இலவச கண் சிகிச்சை முகாம் சிட்டிசன் மழலையா் தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

மேல்விஷாரம் இஸ்லாமியா வெல்பா் சங்கம் மற்றும் வேலூா் சிஎம்சி கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமுக்கு, முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவரும், இஸ்லாமிய வெல்பா் சங்கத்தின் தலைவருமான ஏ.இப்ராஹிம் கலிலுல்லா தலைமை வகித்து, தொடக்கி வைத்தாா். செயலாளா் அப்துல் குத்தூஸ், பள்ளியின் தாளாளா் இா்ஷாத், அறங்காவலா் அஜிமுத்தீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வேலூா் சிஎம்சி மருத்துவமனை கண் சிகிச்சை நிபுணா் ஜான் பி ஹிட்லா் தலைமையிலான 20 போ் கொண்ட மருத்துவக் குழுவினா் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்தனா். இதில், 50 போ் கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனா். மேலும், 300 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

முகாமில் சங்க நிா்வாகிகள் ஷபீக் அகமது, முபின் அகமது, அல்தாப் அகமது, இம்தாதுல்லா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT