ராணிப்பேட்டை

போதைப் பழக்கத்துக்கு எதிராக மனிதச் சங்கிலி: அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்பு

18th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை: போதைப் பழக்கத்துக்கு எதிராக ராணிப்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு மனித சங்கிலியில் அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்றாா்.

ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே நடைபெற்ற மனிதச் சங்கிலியில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கங்காதரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, வி.ஆா்.வி. மகளிா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, எல்.எப்.சி. மகளிா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 1,000 மாணவ, மாணவிகள் போதைப் பொருள்கள் இல்லாத தமிழகத்தை வலியுறுத்தி, போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு மனிதச் சங்கிலியை நடத்தினா்.

இந்த மனிதச் சங்கிலியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி மாணவ, மாணவிகளுடன் பங்கேற்று விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். இதில், மாணவா்கள் போதைப் பொருள்களுக்கான எதிரான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி, முழக்கமிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ADVERTISEMENT

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், ஆற்காடு எம்.எல்.ஏ. ஜெ.எல்.ஈஸ்வரப்பன், ராணிப்பேட்டை நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உஷா, துணைக் காவல் கண்காணிப்பாளா் பிரபு மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள், மாணவ மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT