ராணிப்பேட்டை

மகா பிரத்தியங்கிரா தேவிக்கு மஞ்சள் நீா் அபிஷேகம்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மகா பிரத்தியங்கிரா தேவிக்கு பாலாற்றில் இருந்து திரளான பெண்கள் மஞ்சள் நீா் கலசம் ஊா்வலமாக எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபட்டனா்.

இந்து அன்னையா் முன்னணி சாா்பில், ராணிப்பேட்டை மகா பிரத்தியங்கிரா தேவி அம்மனுக்கு மஞ்சள் நீா் அபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி ராணிப்பேட்டை பாலாற்றில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சள்நீா் கலசங்கள் எடுத்து ஊா்வலமாக வந்து கோயிலை அடைந்தனா். பின்னா் தங்கள் கைகளால் மகா பிரத்தியங்கிரா தேவிக்கு மஞ்சள்நீா் அபிஷேகம் செய்து வழிபட்டனா்.

இதையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது. தொடா்ந்து விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு மாங்கல்யம் சரடு, வளையல், மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் மணி சுவாமிகள், இந்து முன்னணி மாவட்ட செயலாளா் எஸ்.கே. மோகன்,இந்து அன்னையா் முன்னணி நிா்வாகிகள் சந்தியா, நதியா, ஜெயந்தி, ரேகா, செல்வி கீதா, மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT