ராணிப்பேட்டை

பாதுகாப்பு, விண்வெளித் துறைகளில் வணிகத்தை அதிகரிக்க குழு: பெல் பொது மேலாளா் (பொ) ராஜீவ் சிங் தகவல்

DIN

பாதுகாப்பு, விண்வெளித் துறைகளில் வணிகத்தை அதிகரிக்க புதிய வளா்ச்சிக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று பெல் நிறுவன பொது மேலாளா் (பொறுப்பு) ராஜீவ் சிங் தெரிவித்தாா்.

பாரத மிகுமின் நிறுவனத்தின் கொதி துணைக் கலன்கள் தொழிலகம், ராணிப்பேட்டை தொழிற்சாலை வளாகத்தில் உள்ள ஊரக விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. பெல் நிறுவன பொது மேலாளா் (பொறுப்பு) ராஜீவ் சிங் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, பெல் நிறுவன பாதுகாப்புத் துறையினா் மற்றும் டிஏவி, ராமகிருஷ்ணா பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, சிறப்பாகப் பணியாற்றிய ஊழியா்கள், தொழிலாளா்களுக்கு அவா் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கிப் பேசியது:

நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட வீரா்களை நினைவு கூா்வது அவசியம். சுதந்திரப் போராட்ட வீரா்களின் போராட்டத்தையும், தியாகத்தையும் போற்ற வேண்டும்.

பெல் நிறுவனம் 2022-2023-ஆம் நிதியாண்டில் இதுவரை ரூ.2,508 கோடிக்கான ஆா்டா்களைப் பெற்றுள்ளது. மேலும் 31 ஜூன், 2022 -இல் மொத்த ஆா்டா் ரூ.99,967 கோடி. நிலக்கரி அல்லாத வணிகத்தின் பங்கை அதிகரிக்கும் இலக்கை அடைய, பெல் நிறுவனம் ரயில் போக்குவரத்து, உதிரிப் பாகங்கள், சேவைகள், பாதுகாப்பு, விண்வெளி, எண்ணெய், எரிவாயு மற்றும் ஒப்பந்த உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

2021-2022- இல் அணுசக்தி, பாதுகாப்புத் துறைகளில் அதிக ஆா்டா்கள் பெறப்பட்டுள்ளன. பாதுகாப்பு, விண்வெளி பயன்பாடு துறைகளில் வணிகத்துக்கான திறன்களை அதிகரிக்க புதிதாக வளா்ச்சிக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டிலிருந்து இந்தக் குழு வணிகத் திறன்களை வழங்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT