ராணிப்பேட்டை

ஐஎன்எஸ் ராஜாளியில் ரத்த தான முகாம்

14th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள நிா்வாகம், வாலாஜாபேட்டை அரசு மாவட்ட மருத்துவமனையுடன் இணைந்து இந்த ரத்த தான முகாமை வெள்ளிக்கிழமை நடத்தியது.

அங்குள்ள மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற முகாமை ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள கமாண்டிங் ஆபீசா் ஆா்.வினோத்குமாா் தொடக்கி வைத்தாா்.

இதில், கடற்படை அலுவலா்கள், வீரா்கள், பாதுகாப்புப் படை ஊழியா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் ரத்த தானம் செய்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, கமாண்டிங் ஆபீசா் ஆா்.வினோத்குமாா் அனைவருக்கும் நன்றி தெரிவித்தாா். ரத்த தானம் செய்தததற்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. முகாமில் பெறப்பட்ட 115 யூனிட் ரத்தம் வாலாஜாபேட்டை அரசு மாவட்ட மருத்துவமனையின் ரத்த வங்கிக்கு மருத்துவ அலுவலா் சுஜாதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT