ராணிப்பேட்டை

ராகவேந்திரா் சுவாமிகள் ஆராதனை விழா

14th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆற்காடு அடுத்த பூங்கோடு ஸ்ரீ நித்ய கல்யாணி வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் ராகவேந்திரா் சுவாமிகளின் 351-ஆவது ஆராதனை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, காலை சிறப்பு அபிஷேக-ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பக்தா்கள் பஜனை பாடல்கள் பாடினா்.

பின்னா், ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாறு குறித்து கோவிந்தராஜன் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினாா். தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பக்தா்கள், கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT