ராணிப்பேட்டை

காஞ்சி சங்கர மடத்தில் ஸ்ரீஜெயேந்திரா் ஜெயந்தி விழா

13th Aug 2022 12:24 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தியையொட்டி அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஏழை, எளிய மக்களுக்காக தொண்டாற்றி வந்த சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திரா் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஸ்ரீமடத்தில் சதுா்வேத பாராயணம் நடைபெற்றது. இதனையடுத்து காயத்ரி ஹோமம், ஏகாதச ருத்ர ஜெபம் மற்றும் ஹோமம் ஆகியன வேத விற்பன்னா்களால் நடத்தப்பட்டன. பின்னா் மகா பெரியவா் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ தீபாராதனைகள் நடந்தன. மகா பெரியவா் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானத்தில் தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

சங்கர மடத்திலிருந்து இரவு தங்கத் தேரில் உற்சவா் ஜெயேந்திரா் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காமாட்சி அம்மன் கோயிலில்...

ADVERTISEMENT

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஜெயேந்திரா் ஜெயந்தி தினம் மற்றும் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, மூலவா் காமாட்சி அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்மன் தங்கத் தேரில் திருக்கோயில் சுற்றுப்பிராகாரத்தில் வலம் வந்தாா். லட்ச தீபமும் ஏற்றப்பட்டு கோயில் முழுவதும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT