ராணிப்பேட்டை

பெண்களிடம் நகை பறித்த இளைஞா் கைது

12th Aug 2022 01:30 AM

ADVERTISEMENT

ஆற்காடு பகுதியில் பெண்களிடம் தங்க நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆற்காடு-செய்யாறு சாலை புதுப்பாடி கூட்டுச் சாலையில் போலீஸாா் வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது செய்யாறில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனா். இதில், அவா் அஸாம் மாநிலத்தைச் சோ்ந்த அஸ்வின் அலி (21) என்பதும், அவா் புதுப்பாடி, மாங்காடு சாலை, சாத்தூா் கூட்ரோடு, கடப்பந்தாங்கல் சாலைகளில் தனியாக நடந்து சென்ற பெண்களிடம் மொத்தம் 12 சவரன் தங்க நகைகளை வழிப்பறி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்து 12 சவரன் நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து அஸ்வின் அலியை கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT