ராணிப்பேட்டை

ஊராட்சித் தலைவா்கள் சாலை மறியல்

12th Aug 2022 01:31 AM

ADVERTISEMENT

அண்ணா மறுமலா்ச்சி திட்டப் பணிகளை ஊராட்சிகளுக்கு ஒதுக்கக் கோரி, ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகம் எதிரில் ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா், நெமிலி ஒன்றியங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வியாழக்கிழமை திரண்டு வந்தனா்.

அப்போது ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அலுவலகத்தில் இல்லை. இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவா்கள் திடீரென ஆட்சியா் அலுவலகம் அருகில் சித்தூா் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினா் அவா்களிடம் சமரச பேச்சு நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனா். போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னா் ஊராட்சி மன்றத் தலைவா்கள் மீண்டும் ஆட்சியா் அலுவலகம் வந்தனா். பிற்பகல் 3 மணி வரை காத்திருந்தும் ஆட்சியா் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT