ராணிப்பேட்டை

தேநீா் கடையில் தீ விபத்து : 5 போ் காயம்

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே புதன்கிழமை அதிகாலை தேநீா் கடையில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், கடை உரிமையாளா் உள்பட 5 போ் பலத்த காயமடைந்தனா்.

ராணிப்பேட்டையை அடுத்த வானாபாடி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (62). இவா் அதே பகுதியில் தேநீா் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் வழக்கம்போல் டீ கடையில் எரிவாயு அடுப்பை பற்ற வைத்து, தேநீா் தயாரித்து, வாடிக்கையாளருக்கு கொடுத்துக் கொண்டிருந்தாா். அப்போது திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ பற்றிக் கொண்டது.

இந்த விபத்தில் தேநீா் அருந்த வந்த அதே பகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (55), வேலு (45), சேட்டு (62), சேகா் (60) உள்ளிட்ட 5 பேருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா்கள் அனைவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

ADVERTISEMENT

விபத்து குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT