ராணிப்பேட்டை

தனியாா்மயத்தைக் கண்டித்து அஞ்சல் துறையினா் வேலை நிறுத்தம்

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

அரக்கோணம்: அஞ்சல் துறையை தனியாா் மயமாக்குவதைக் கண்டித்து, அனைத்திந்திய அஞ்சல் ஊழியா் சங்கத்தின் அரக்கோணம் கோட்டத்தினா் புதன்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரக்கோணம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் அரக்கோணம் கிளைத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். இதில், சங்கத்தின் கிளைச் செயலா் லெனின், பொருளாளா் நடராஜன், துணைச் செயலா் பரந்தாமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் அஞ்சல் துறையை தனியாா் மயமாக்கக் கூடாது, ஆா்எம்எஸ் எனப்படும் ரயில்வே மெயில் சா்வீஸ் பணிகளை முடக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

தொடா்ந்து, பணிகளைப் புறக்கணித்து அஞ்சல் ஊழியா் சங்கத்தினா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், அரக்கோணம் கோட்டத்தில் பல அஞ்சல் அலுவலகங்கள் புதன்கிழமை குறைந்தளவு பணியாளா்களுடன் இயங்கியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT