ராணிப்பேட்டை

கலவை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 3,500 நெல் மூட்டைகள் விற்பனை

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த கலவை வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு, புதன்கிழமை 3,500 நெல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

கலவை, சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனா். இந்த நிலையில், புதன்கிழமை 98 வாகனங்களில் 3,500 நெல் மூட்டைகள் வந்தன. இதில், 75 கிலோ எடை கொண்ட நெல் மூட்டை கோ.51 அதிகபட்சமாக ரூ. 1,161, குறைந்தபட்சமாக ரூ. 1,012-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல், ஆா் என் ஆா் நெல் ரகம் அதிகபட்சமாக ரூ. 1,179-க்கும், மகேந்திரா நெல் அதிகபட்சமாக ரூ. 1,412-க்கும் விற்பனை செய்யப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் மதன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT