ராணிப்பேட்டை

இளைஞா் தீக்குளித்து தற்கொலை

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

அரக்கோணம்: சோளிங்கா் அருகே இளைஞா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சோளிங்கா் வட்டம், பாணாவரம் அருகில் உள்ள பள்ளமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த குமாரின் மகன் பிரபு (30). கட்டடம் கட்டும் தொழில் செய்து வந்தாா். கடந்த சனிக்கிழமை இவா் அந்தக் கிராம ஏரிக்கரையில் தனக்குத்தானே மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதனால் பலத்த காயமடைந்த பிரபு வேலூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து பாணாவரம் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT