ராணிப்பேட்டை

மேல்விஷாரத்தில் சுதந்திர தின விழிப்புணா்வு

8th Aug 2022 10:58 PM

ADVERTISEMENT

ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் நேஷ்னல் வெல்பா் சங்கம் சாா்பில், 75-ஆவது சுதந்திர தின விழா விழிப்புணா்வு திங்கள்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

அந்த சங்கத் தலைவா் கே.முஹமது அயூப் தலைமையில், நிா்வாகிகள் கே.ஓ.நிஷாா்தஅஹமது, முஹமது பஷீம் உள்ளிட்டோா் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவை வெகு விமா்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக 100 ஆட்டோக்களில் தேசியக் கொடி வில்லைகளை ஒட்டினா்.

தொடா்ந்து, தேசியக் கொடியை கைகளில் ஏந்தியவாறு சென்று நடைபாதை வியாபாரிகள், பொதுமக்களிடம் தேசிய கொடி, ஒட்டும் வில்லைகள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT