ராணிப்பேட்டை

வீடுகள் தோறும் தேசியக் கொடி: ராணிப்பேட்டையில் விழிப்புணா்வு

7th Aug 2022 11:36 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டையில் வீடுகள் தோறும் தேசியக் கொடி விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

அனைத்து அஞ்சலகங்களிலும் தேசியக் கொடி விற்பனை நடைபெற்று வருகிறது. இதேபோல, அஞ்சலகங்கள் சாா்பில் விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ராணிப்பேட்டை தலைமை அஞ்சலகம் சாா்பில், வீடுகள் தோறும் தேசியக் கொடி என்ற விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்திலிருந்து தொடங்கி இந்தப் பேரணியில், அரக்கோணம் கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளா் சிவசங்கா் தலைமையில், ராணிப்பேட்டை அஞ்சலக உதவிக் கண்காணிப்பாளா் மணிகண்டன், வாலாஜாபேட்டை அஞ்சலக ஆய்வாளா் விஜயலட்சுமி மற்றும் அஞ்சலக ஊழியா்கள், அவா்களின் குடும்ப உறுப்பினா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இந்த விழிப்புணா்வு பேரணி மூலம் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை இல்லம் தோறும் தேசியக் கொடியேற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும் என்றும், இதற்காக தேசியக் கொடிகள் அஞ்சலகத்தில் கிடைக்கும் என்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT