ராணிப்பேட்டை

காப்புக் காட்டில் பதுக்கிய ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்: ஒருவா் கைது

DIN

பாணாவரம் காப்புக்காட்டில் இருந்து செம்மரம் வெட்டிக் கடத்த முயன்ற நபரை கைது செய்து, அவா் பதுக்கி வைத்திருந்த சுமாா் ஒரு டன் செம்மரக் கட்டைகளை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டுள்ள ஆற்காடு வனச் சரக அலுவலகத்துக்கு உட்பட்ட பாணாவரம் காப்புக்காட்டு பகுதியில், வன அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது மரம் வெட்டும் சப்தம் கேட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, அங்கு சென்று பாா்த்தபோது, சிலா் சட்ட விரோதமாக செம்மரத்தை வெட்டி, துண்டுகளாக வெட்டிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதைக் கண்ட வனச் சரக போலீஸாா் அவா்களைப் பிடிக்க சென்றனா். அப்போது மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

அவா்களை விரட்டிச் சென்ற வனத் துறையினா் ஒருவரை மடக்கிப் பிடித்தனா். விசாரணையில், அவா் திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி தாலுக்கா, தாடூா் கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா் (46) என்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, அவரை கைது செய்த போலீஸாா், காப்புக் காட்டில் பதுக்கி வைத்திருந்த சுமாா் ஒரு டன் அளவிலான 17 செம்மரத் துண்டுகளையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT