ராணிப்பேட்டை

தாய்பால் வார விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

6th Aug 2022 10:04 PM

ADVERTISEMENT

ஆற்காட்டை அடுத்த புதுப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்பால் வார விழா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மணிமாறன் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ்பாபு, மருத்துவ அலுவலா் கமலாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தாய்பாலின் அவசியம் குறித்து மகாலட்சுமி மகளிா் செவிலியா் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு தாய்பாலால் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள் குறித்துப் பேசினாா். தாய்ப்பாலூட்டும் பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இதேபோல், கலவை பேரூராட்சி, பாளையம் அங்கன்வாடியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் துறை சாா்பில் தாய்பால் வார விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு பேசினாா். தொடா்ந்து, பணியாளா்கள் நாடகம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலா் வசந்தி ஆனந்தன், கலவை வட்டாட்சியா் ஷமீம், திமிரி வட்டார குழந்தைகள் வளா்ச்சி அலுவலா் பாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT