ராணிப்பேட்டை

திமிரியில் இளைஞர் வெட்டிக் கொலை

2nd Aug 2022 03:01 PM

ADVERTISEMENT

ஆற்காடு: திமிரியில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி பேரூராட்சி வேலாயுதபாணி தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் இவரது மகன் கலையரசன் (22) கூலி தொழிலாளி.

இந்நிலையில்  செவ்வாய்க்கிழமை பகல்  கலையரசன் மற்றும்  அவருடைய நண்பர்களான கோபி மற்றும் கார்த்திக் ஆகிய மூவரும் பைக்கில் திமிரி ராமப்பாளையம் செல்லும் சாலையில்  சென்றுள்ளனர். 

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தினகரன் அவரது மகன் அசோக் குமார் மற்றும் தினேஷ் ஆகியோர் வழிமறித்து கலையரசன் உள்ளிட்ட மூவரையும் தாக்கி கத்தியால் வெட்டி உள்ளனர். 
இதில் படுகாயம் அடைந்த கலையரசன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் கோபி ஆற்காடு அரசு மருத்துவமனையிலும்,  கார்த்திக் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும்  சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க: தீமிதி திருவிழாவில் அக்னி குண்டத்தில் விழுந்து படுகாயமடைந்த பக்தர்கள்

இந்த கொலை சம்பவம் குறித்து திமிரி காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT