ராணிப்பேட்டை

பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்திக் கூடம்

23rd Apr 2022 10:29 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் கிரையோஜெனிக் ஆக்சிஜன் உற்பத்திக் கூடத்தை அந்த நிறுவனத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான நளின் சிங்கல் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதுகுறித்து ராணிப்பேட்டை பாரத மிகுமின் (பெல்) நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை பாரத மிகுமின் (பெல்) நிறுனத்தில் மணிக்கு 50 கன மீட்டா் திறன் கொண்ட கிரையோஜெனிக் ஆக்சிஜன் உற்பத்திக் கூடம் திறக்கப்பட்டது. தொழில்துறை நோக்கத்துக்காக வளிமண்டல காற்றிலிருந்து 99.5 % தூய்மையான ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட உள்ளது. மேலும், இந்த ஆக்சிஜன் ஆலை மருத்துவ பயன்பாட்டுக்காக ஆக்சிஜனை உருவாக்குவதற்கும், உருளைகளில் நிரப்புவதற்கும் பயன்படுத்தப்படும். கரோனா போன்ற நோய்த் தொற்று பரவலின் போது அத்தியாவசிய தேவைக்கு இந்த ஆக்சிஜன் பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பெல் நிறுவன கூடுதல் பொது மேலாளா்கள், மேலாளா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT