ராணிப்பேட்டை

சிஐஎஸ்எப் பயிற்சிக் காவலா் தற்கொலை

17th Apr 2022 11:36 PM

ADVERTISEMENT

அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்புப்படை மண்டல பயிற்சி மையத்தில் வடமாநிலத்தைச் சோ்ந்த பயிற்சிக் காவலா் ஜெயபிரகாஷ்குமாா் (23) ஞாயிற்றுக்கிழமை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மையம் உள்ளது. இங்கு பிகாா் மாநிலம் தாணா மாவட்டம் சோலாப்பூரை அடுத்த கிணறி பகுதியைச் சோ்ந்த ஜெயபிரகாஷ்குமாா்(23) கடந்த மாா்ச் 23 முதல் காவலராகப் பயிற்சி பெற்று வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை உணவு உண்ணும் இடத்திற்கு வந்த ஜெயபிரகாஷ்குமாா், அங்கு யாரும் இல்லாத அறையில் மின்விசிறியில் தூக்கிட்டது ஒரு மணி நேரம் கழித்து தெரிய வந்துள்ளது. அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஜெயபிரகாஷ்குமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து தக்கோலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT