ராணிப்பேட்டை

ஆற்காட்டில் விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

16th Apr 2022 12:13 AM

ADVERTISEMENT

ஆற்காட்டில் செய்யாறு சாலையில் உள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீவரசித்தி விநாயகா் கோவில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை, 2-வது கால யாகசாலை பூஜை, தீபாராதனை, மருந்து சாத்துதல், 3-வது கால யாக பூஜை உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து கோயில் கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT