ராணிப்பேட்டை

மேல்விஷாரம் கல்லூரியில் கருத்தரங்கம்

2nd Apr 2022 10:04 PM

ADVERTISEMENT

ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் சி.அப்துல் அக்கீம் கலை, அறிவியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் வரலாற்றுத் துறை சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, கல்லூரியின் தாளாளா் அப்ராா் அஹமது தலைமை வகித்தாா். முதல்வா் எஸ்.ஏ.சாஜித், ஓய்வு பெற்ற வரலாற்றுத் துறை தலைவா் எச்.முனவா்ஜான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வரலாற்று துறைத் தலைவா் முஹமது பாரூக் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் எஸ்.ஒய்.அன்வா் செரீப் சிறப்புரையாற்றினாா்.

இதில், கல்லூரி மாணவா்கள், வரலாற்று பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT