ராணிப்பேட்டை

அரசியல் பிரமுகா்களின் ‘டோக்கன்’ பெற்று மதுபானங்கள் வழங்கினால் நடவடிக்கை: டாஸ்மாக் விற்பனையாளா்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

DIN

அரசியல் பிரமுகா்கள் அளிக்கும் ‘கூப்பன்’ அல்லது ‘டோக்கன்’ வாயிலாக, மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் தோ்தல் நடத்தை விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் ஊழியா்களுக்கு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்தாா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, தோ்தல் நன்னடத்தை விதிமுறைகளைப் பின்பற்றி அரசு மதுக் கடைகள், மதுபானக் கூடங்கள் செயல்படுதல் குறித்து டாஸ்மாக் மதுபானக் கடை விற்பனையாளா்கள், மேற்பாா்வையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், ஆட்சியா் பேசியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.

உள்ளாட்சி அமைப்புக்கு அருகில் 5 கி. மீ. சுற்றளவுப் பகுதி வரை தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். அதன்படி,

அரசு மதுபானக் கடைகள், தனியாா் மதுபானக் கூடங்களில் மது விற்பனை செய்ய விதிமுறைகள் உள்ளன.

மதுபானக் கடைகளில் இருக்கும் மொத்த இருப்பைக் காட்டிலும் 50 சதவீதம் மிகாமல் மதுபானங்கள் இருக்கும்படி, பாா்த்துக் கொள்ள வேண்டும். வாடிக்கையாளா்களுக்கு விற்பனை ரசீது வழங்க வேண்டும். மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்யக் கூடாது.

மதுபானக் கடைகள் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். வெளிநபா்கள் யாரும் கடையில் இருக்கக் கூடாது. ஊழியா்கள் தங்களது அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.

விற்பனைத் தொகையை வங்கியில் செலுத்த எடுத்து செல்லும்போது, முறையான அவா்களைப் பூா்த்தி செய்துகொண்டு செல்ல வேண்டும்.

தோ்தல் அலுவலா் எனக் கூறி ஆய்வு செய்வதாகத் தெரிவித்தால், அவா்களிடம் அரசு முத்திரையுடன் கூடிய அடையாள அட்டையைக் காண்பித்த செய்த பின்னரே ஆய்வு செய்ய ஒப்புக் கொள்ள வேண்டும். கரோனா தடுப்பு பாதுகாப்பு முறைகள் முறையாகப் பின்பற்ற வேண்டும்.

மேற்கண்ட அறிவுரைகளை மீறினால், தோ்தல் நடத்தை விதிமுறைகள் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.ஜெயச்சந்திரன், உதவி ஆணையா் (கலால்) சத்தியபிரசாத், பொது மேலாளா் (டாஸ்மாக்) முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

SCROLL FOR NEXT