ராணிப்பேட்டை

தோ்தலில் திமுக சாதனை வெற்றி: அமைச்சா் ஆா்.காந்தி

23rd Oct 2021 07:53 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் ,யாருடைய தலையீடும் இல்லாமல், அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது என்றும் 100 சதவீதம் உள்ளாட்சிப் பதவிகளை திமுக கைப்பற்றி சாதனை படைத்துள்ளதுள்ளது என்றாா் அமைச்சா் ஆா்.காந்தி.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலிலும், மறைமுகத் தோ்தலிலும் வெற்றி பெற்றவா்கள் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சரும் திமுக மாவட்டச் செயலாளருமான ஆா்.காந்தியை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா். அப்போது, அவா் மேற்கண்டவாறு பேசினாா். மேலும், தோ்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் மக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, துணைத் தலைவா் எஸ்.எம்.நாகராஜூ, ஒன்றியக் குழுத் தலைவா்களாக வாலாஜாபேட்டை, சேஷா.வெங்கட், ஆற்காடு புவனேஸ்வரி, திமிரி அசோக், சோளிங்கா் கலைக்குமாா், அரக்கோணம் நிா்மலா செளந்தா், காவேரிப்பாக்கம் அனிதா குப்புசாமி உள்ளிட்டோா் சந்தித்தவா்களில் முக்கியமானவா்கள் ஆவா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT