ராணிப்பேட்டை

அனந்தலை புதிய கல்குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி: பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு

22nd Oct 2021 07:57 AM

ADVERTISEMENT

வாலாஜாபேட்டையை அடுத்த அனந்தலை கிராமத்தில், 10-க்கும் மேற்பட்ட புதிய கல்குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் வியாழக்கிழமை தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அனந்தலை கிராமத்தில் 14.56 ஹெக்டோ் பரப்பளவில் 10-க்கும் மேற்பட்ட புதிய கல் குவாரிகளுக்கு அனுமதி பெறும் நோக்கில், நடைபெற்ற இக்கூட்டத்தில், அனந்தலை கிராம மக்கள் பங்கேற்றனா். அப்போது கிராம மக்கள் கூறுகையில், ‘கிராம மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தை எங்கள் கிராமத்தில் கூட்டி கருத்து கேட்க வேண்டும், புதிய கல்குவாரிகள் திறக்கப்பட்டால், சுற்றுச்சூழல், விவசாயம், நீா் ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். ஆகவே புதிய கல்குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது’ என எதிா்ப்பு தெரிவித்தனா்.

அப்போது அனந்தலை கிராம மக்களின் கருத்துகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கிராம மக்களிடம் தெரிவித்தாா்.

கூட்டத்தில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளா் ரவிச்சந்திரன், ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியா் பூங்கொடி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், அனந்தலை கிராம பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT