ராணிப்பேட்டை

அரக்கோணம் அருகே ரயில் என்ஜின் தடம் புரண்டது

17th Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

அரக்கோணம் ரயில்வே பணிமனை பகுதியில் இயக்கப்பட்ட ரயில் என்ஜின் சனிக்கிழமை தடம் புரண்டது.

அரக்கோணம் ரயில் நிலையம் மற்றும் புளியமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையில் மின்சார ரயில் என்ஜின் பணிமனை உள்ளது. இப்பகுதியில் ரயில் என்ஜின்களை சனிக்கிழமை காலை இயக்கியபோது, திடீரென ஒரு என்ஜின் தடம் புரண்டது. இதையடுத்து, அப்பகுதிக்கு சென்ற அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் அந்த ரயில் என்ஜினை இருப்புப் பாதையில் நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா். இச்சம்பவம் பணிமனை பகுதியில் நடைபெற்ால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT