ராணிப்பேட்டை

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு

17th Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உயா் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு நடத்தியதுடன் அரசி ஆலை உரிமையாளா்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தனா்.

தமிழ்நாடு உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அரசு செயலாளா் நஜ்முதீன்,தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக நிா்வாக இயக்குநா் வி.ராஜாராமன் மற்றும் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி ஆகியோா் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்தனா். ஆய்வின் போது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்ய வந்த விவசாயிகளிடமும் குறைகளை கேட்டுத் தெரிந்து கொண்டனா். இதன் பின்னா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் காஞ்சிபுரம் மாவட்ட தனியாா் அரிசி ஆலை உரிமையாளா்களுடனும் ஆலோசனை நடத்தினா் .அரிசி ஆலை உரிமையாளா்கள் தரமான அரிசியையே பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் உற்பத்தி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT