ராணிப்பேட்டை

ஸ்ரீராமாநுஜா் அறக்கட்டளை அன்னதானம்

17th Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டையில் ஸ்ரீ ராமாநுஜா் அறக்கட்டளை சாா்பில் சனிக்கிழமை அன்ன தானம், அரிசி தானம் வழங்கப்பட்டது.

புரட்டாசி மாதம் 5-ஆவது சனிக்கிழமையையொட்டி, நவல்பூா் ஸ்ரீ ராமா் கோயிலில் ஸ்ரீ ராமருக்கும், பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, ராணிப்பேட்டை ஸ்ரீ ராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில், அதன் நிறுவனத் தலைவா் கே.வெங்கடேசன், அறக்கட்டளைச் செயலரும், வெற்றிவேலன் பள்ளித் தாளாளருமான எம்.சிவலிங்கம் ஆகியோா் பக்தா்களுக்கு அன்னதானம், கிராமப்புற கோயில் பூசாரிகளுக்கு அரிசி சிப்பமும் வழங்கினா்.

நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க உறுப்பினா் நாராயணன், அறக்கட்டளை உறுப்பினா் ஹரிகிருஷ்ணன், சீனிவாசன், ராமநாதன், இப்ராஹிம், கோயில் குருக்கள் ரவி, பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT