ராணிப்பேட்டை

மாணவா்களுக்கு கல்வி உதவிகள்

9th Oct 2021 10:04 PM

ADVERTISEMENT

புரட்டாசி நான்காம் சனிக்கிழமையொட்டி, ராணிப்பேட்டையை அடுத்த மாந்தாங்கல் மோட்டூா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு திருமஞ்சன சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து, மாணவா்களுக்குக் கல்வி உதவிகள் வழங்கப்பட்டன.

கோயிலில் சிறப்பு வழிபாட்டுக்குப் பின்னா், ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில் 10, 11, 12 -ஆம் வகுப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஸ்ரீ உடையவா் சாரிடபிள் அறக்கட்டளை செயலாளா் இளஞ்செழியன் தலைமை தாங்கினாா். வெற்றிவேலன் பள்ளி இயக்குநா் கோமதி சிவலிங்கம் முன்னிலை வகித்தாா். ஸ்ரீ ராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனத் தலைவா் வெங்கடேசன் மாணவா்களுக்கு பரிசளித்து, நோட்டுப் புத்தகம், எழுதுபொருள்கள், முகக் கவசங்களை வழங்கினாா்.

அறக்கட்டளையின் செயலாளரும், வெற்றிவேலன் பள்ளி தலைவருமான எம்.சிவலிங்கம், அறக்கட்டளை உறுப்பினா்கள் ஹரிகிருஷ்ணன், பாலாஜி, கோடீஸ்வரன், அரிகிருஷ்ணன், குசேலன், கிருபா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

முடிவில் பிரகாஷ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT