ராணிப்பேட்டை

நோ்மையாகவும், சுதந்திரமாகவும் தோ்தல்: ஆட்சியா் உறுதி

9th Oct 2021 08:02 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் நோ்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தோ்தலுக்காக, 757 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3,68,426 வாக்காளா்கள் வாக்களிக்கும் வகையில், அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தோ்தல் நோ்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் உள்ளேயும், வெளியேயும் 2 சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

தோ்தல் பாதுகாப்புப் பணியில் காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் தலைமையில் 1, 940 போ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை மேற்கொள்ளவும், கண்காணிக்கவும் வாக்குச் சாவடிக்கு இரண்டு போ் வீதம் 1,514 தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT