ராணிப்பேட்டை

‘பருவ மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வேண்டும்’

DIN

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பருவ மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என குறைதீா்க் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விவசாயிகளிடமிருந்து 97 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அதில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் சேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீடும், பயிா் காப்பீட்டுத் திட்ட இழப்பீடும் உடனடியாக பெற்றுத் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஏரி கால்வாய்கள் தூா்வாரி சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக விவசாயிகள் மனு அளித்தனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் எம்.ஜெயச்சந்திரன், வேளாண் துறை இணை இயக்குநா் வேலாயுதம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) விஸ்வநாதன், துணை இயக்குநா் தோட்டக்கலை லதா மகேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT