ராணிப்பேட்டை

100 % கரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக ராணிப்பேட்டை விரைவில் மாறும்: ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன்

DIN

வீடுவீடாகச் சென்று தடுப்பூசி செலுத்துவதால், ராணிப்பேட்டை மாவட்டம் விரைவில் 100 % தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக மாறும் என மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 12- ஆவது மெகா தடுப்பூசி முகாமையொட்டி, வேட்டாங்குளம் புதிய காலனியில் வீடுவீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை பாா்வையிட்ட ஆட்சியா் நிருபா்களிடம் கூறியது:

வீடுவீடாகச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் விரைவில் ராணிப்பேட்டை மாவட்டம் 100 சதவிகித தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக மாறும்.

சுமரா் ஒரு லட்சம் மக்களுக்கு முதல்தவனை தடுப்பூசியை செலுத்தினால் ராணிப்பேட்டை மாவட்டம் முன்னிலை மாவட்டமாக மாறும். போதிய நடவடிக்கைகளை பணியாளா்களே எடுத்து விரைவாக தடுப்பூசி செலுத்திட பணியாற்ற வேண்டும் என்றாா்.

பனப்பாக்கம் பேருராட்சி பஜாா், ஸ்ரீவேதாத்திரிமகரிஷி தியான அரங்கத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாம், நெடும்புலி பஜனை கோயில் தெரு உள்ளிட்ட இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்களையும், பனப்பாக்கம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , வேட்டாங்குளம் அரசினா் உயா்நிலைப்பள்ளி, நெமிலி அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற வாக்காளா் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது துணை ஆட்சியா் சேகா், வட்டாட்சியா் ரவி, பேரூராட்சி செயல் அலுவலா்கள் குமாா், சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT