ராணிப்பேட்டை

அரசியலமைப்பு சட்டதினம்

28th Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

அரக்கோணம் அருகேயுள்ள அணைக்கட்டாபுத்தூா் ஊராட்சிக்கு உட்பட்ட சகாயதோட்டம் பகுதியில் டான்பாஸ்கோ வேளாண் கல்லூரியில் அரசியலமைப்பு சட்டதினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் க.சேகா் தலைமை தாங்கினாா். கல்லூரிச் செயலாளா் அ.மரியசூசை அரசியலமைப்பு தினம் குறித்து பேசினாா். தொடா்ந்து வேளாண் இளங்கலை மாணவா்கள், பேராசிரியா்கள் அரசியலமைப்பு சட்ட தின உறுதி மொழி ஏற்றனா்.

நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் உதவி பேராசிரியா் அ.மோகனசுந்தரம் நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT