ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் நவ. 30-இல் வாகனங்கள் பொது ஏலம்

24th Nov 2021 11:39 PM

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில், வாகனங்களின் பொதுஏலம் நவ. 30 -இல் விடப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பல்வேறு வழக்குகளின் கீழ் கைப்பற்றப்பட்டு, உரிமை கோரப்படாத 125 வாகனங்கள் அரசுடமையாக்கப்பட்டது.

ADVERTISEMENT

இவற்றின் பொது ஏலம் நவ. 30-ஆம் தேதி காலை 11 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த வாகனங்களை நவ. 24 முதல் 26 ஆம் தேதி வரை பாா்வையிடலாம்.

ஏலம் எடுக்க விருப்பமுள்ளவா்கள் 27, 29- ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரூ.25 ஆயிரம் முன்வைப்பு தொகை செலுத்தி தாங்களுடைய பெயா், விலாசத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். வாகனத்தை ஏலம் எடுத்தவா்கள் ஏலத் தொகையுடன் ஜிஎஸ்டி தொகையையும் சோ்த்து உடனடியாக செலுத்தி வாகனத்தை சான்றிதழுடன் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT