ராணிப்பேட்டை

ரத்தினகிரி கோயிலில் தமிழிசை தரிசனம்

24th Nov 2021 11:39 PM

ADVERTISEMENT

 

ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி வள்ளி ,தெய்வனை சமேத பாலமுருகன் கோவிலில் புதுச்சேரி துணை நிலை ஆளுநா் தமிழிசை சௌந்தராஜன் தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை தரிசனம் செய்தாா்.

குடியாத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், மாலையில் ரத்தினகிரி பாலமுருகன் கோயிலுக்கு வருகை தந்தாா். அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பூரண கும் பமரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா் சிறப்புப் பூஜையில் பங்கேற்று வழிபட்டாா்.

இதையடுத்து, அவருக்கு ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் சால்வை அணிவித்து பிரசாதங்களை வழங்கினாா்.

ADVERTISEMENT

முன்னதாக, அவரை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், கோட்டாட்சியா் பூங்கொடி உள்ளிட்டோா் வரவேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT