ராணிப்பேட்டை

மாநில அளவிலான டேபிள்டென்னிஸ்: அரக்கோணம் மாணவிகள் சாதனை

24th Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாவது இடங்களைப் பிடித்து அரக்கோணம் மாணவிகள் சாதனை புரிந்தனா்.

மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் கடந்த 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றன. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். இதில், அரக்கோணம் மதா்தெரேசா டேபிள் டென்னிஸ் அகாதெமியைச் சோ்ந்த மூன்று மாணவிகள் பங்கேற்று முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்தனா்.

அரக்கோணம் பாரதிதாசனாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவி எஸ்.நளினிஅம்ருதா 19 வயதுக்குட்பட்டோா் பிரிவில் முதல் இடத்தையும், 17 வயதுக்குட்பட்டோா் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றாா். எஸ்.எம்.எஸ் விமல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் பி.ஆா்.நந்தினி 15 வயதுக்குள்பட்டோா் பிரிவிலும், 13 வயதுக்குள்பட்டோா் பிரிவிலும் இரண்டாம் இடத்தை பெற்றாா். அரக்கோணத்தைச் சோ்ந்தவரும் பொன்னேரி டி.வேலம்மாள் இண்டா்நேஷனல் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் ஜி.வா்னிகா 11 வயதுக்குட்பட்டோா் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றாா்.

சாதனை புரிந்த மூன்று மாணவிகளையும் மற்றும் இவா்களின் பயிற்சியாளா் பி.ஜனாா்த்தனனையும் அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத்தின் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம், ராணிப்பேட்டை மாவட்ட டேபிள்டென்னிஸ் சங்கச் செயலா் எஸ்.பன்னீா்செல்வம் மற்றும் சங்க நிா்வாகிகள் பாராட்டினா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT