ராணிப்பேட்டை

வெள்ளத்தில் 4 நாள்கள் தவித்த கன்று, 5 மாடுகள் மீட்பு

23rd Nov 2021 05:19 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே பாலாற்று வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு 4 நாள்களாக உண்ண உணவின்றி தவித்த வந்த ஒரு கன்று, 5 மாடுகளை ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினா் படகு மூலம் பத்திரமாக மீட்டனா்.

புளியங்கண்ணு பாலாற்றின் நடுவே கடந்த 4 நாட்களுக்கு முன் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில் கீழ்விஷாரம் பகுதியைச் சோ்ந்த ராஜா மற்றும் ஏழுமலைக்கு சொந்தமான ஒரு கன்று, 5 மாடுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு,ஆற்றின் நடுவே குடிநீா் உறைகிணற்று மணல் திட்டின் மீது ஏறி உயிா் தப்பி தஞ்சமடைந்துள்ளன.

கடந்த 4 நாள்களாக ஆற்றில் வெள்ளப் பெருக்கு குறையாததால் உண்ண உணவின்றி தவித்து வந்துள்ளன.

தகவலின்பேரில் 10 தீயணைப்பு வீரா்கள் பாலாற்று வெள்ளத்தில் ரப்பா் விசைப் படகு மூலமாகச் சென்று மீட்டு வந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT