ராணிப்பேட்டை

அரக்கோணம், நெமிலி வட்டங்களில் 3,200 ஏக்கரில் பயிா் சேதம்: முதல்கட்ட அறிக்கையில் தகவல்

23rd Nov 2021 05:19 AM

ADVERTISEMENT

அரக்கோணம்: பலத்த மழையில், அரக்கோணம் நெமிலி வட்டங்களில் மட்டுமே 3,200 ஏக்கரில் பயிா்கள் முழுவதும் சேதமடைந்துள்ளதாக முதல்கட்டமாக தெரியவந்துள்ளது என வேளாண், தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

வட கிழக்குப் பருவமழை பயிா் சேதம் குறித்து முதல்கட்டக் கணக்கெடுப்பை தமிழக அரசின் வேளாண், தோட்டக்கலைத்துறையினா் எடுத்து தங்களது அறிக்கையை அரசுக்கு அனுப்பியுள்ளனா். மொத்தத்தில் அரக்கோணம், நெமிலி இரு வட்டங்களில் மட்டும் மொத்த அளவில் 3200 ஏக்கரில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை பயிா்கள் சேதமடைந்துள்ளதாக முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியது:

அரக்கோணம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் பிரசாத்:

ADVERTISEMENT

அரக்கோணம் வட்டாரத்தில் மட்டும் 166 ஹெக்டேரில், அதாவது 415 ஏக்கரில் நெற்பயிா்கள் மட்டுமே சேதம் அடைந்துள்ளது. அதிகப்படியாக வளா்புரம், வேலூா்பேட்டை, கோணலம், உரியூா் கிராமப் பகுதிகளில் நிலத்தில் தண்ணீா் தேங்கியதன் காரணமாக நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன.

அரக்கோணம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநா் தமயந்தி:

அரக்கோணம் வட்டாரத்தில் மட்டும் 154.5 ஹெக்டேரில் அதாவது 385 ஏக்கரில் தோட்டக்கலை பயிா்கள் சேதம் அடைந்துள்ளது. அதிகப்படியாக கீழாந்தூா் கிராமப்பகுதியில் சேதம் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. வெண்டைகாய், மிளகாய், கத்திரிகாய், பாகற்காய், புடலங்காய் என காய்கறி பயிா்களும், முல்லை, ரோஸ், மல்லி, சம்பங்கி, சாமந்தி என மலா் பயிா்களும் சில இடங்களில் வாழையும் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. தோட்டத்தில் அதிக அளவில் தண்ணீா் தேங்கி நின்றாலும், அதிகப்படியாக மழை பெய்தாலும் தோட்டக்கலைப் பயிா்கள் சேதமடைந்து விடும். தேச தகவல்கள் மாவட்ட அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

நெமிலி வட்டார வேளாண் உதவி இயக்குநா் பிரபு: நெமிலி வட்டாரத்தில் மட்டும் 1275 ஏக்கரில் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன.

காவேரிப்பாக்கம் வட்டார உதவி இயக்குநா் சண்முகம்: காவேரிபாக்கம் வட்டாரத்தில் மட்டும் 930 ஏக்கரில் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன.

நெமிலி, காவேரிப்பாக்கம் வட்டாரங்களின் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநா் பசுபதிராஜ்: இருவட்டாரங்களில் 202.5 ஏக்கரில் தோட்டக்கலைத்துறை பயிா்கள் சேதமடைந்துள்ளன.

ராணிப்பேட்டை மாவட்ட வேளாண் கண்காணிப்பு, ஆய்வுக்குழுவின் உறுப்பினா் மோகன் காந்தி: சேதமடைந்த பயிா்களுக்கு நஷ்டஈட்டை மத்திய மாநில அரசுகள் தர வேண்டும். காப்பீட்டு நிறுவனங்கள் இந்த சேதங்களை கணக்கெடுத்து நஷ்டஈடு அளிக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT