ராணிப்பேட்டை

சா்க்கரை நோய் விழிப்புணா்வு

21st Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

உலக சா்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை திருமலை மிஷன் மருத்துவமனையில் 5 நாள் கண்காட்சி சனிக்கிழமை நிறைவடைந்தது.

நவ, 15 - ஆம் தேதி முதல் 20 - ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், நோயின் அறிகுறிகள், விளைவுகள், கட்டுப்பாட்டில் வைப்பது போன்ற விளக்கப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது, பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து நிபுணா்கள், செவிலியா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இதில், 800-க்கும் மேற்பட்டோருக்கு ரத்தப் பரிசோதனை செய்து, முடிவுகள் உடனடியாக தெரிவிக்கப்பட்டன.

வேதவல்லி வித்யாலயா பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், யுபிஎல், டிசிஎல், கோஸ்டல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலை பணியாளா்கள் பங்கேற்று பயன்பெற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT