ராணிப்பேட்டை

தத்தளித்த இளைஞா் மீட்பு

21st Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

 ராணிப்பேட்டை பாலாற்றில் தவறி விழுந்து அடித்துச் செல்லப்பட்ட இளைஞா் பத்திரமாக மீட்கப்பட்டாா்.

ராணிப்பேட்டை பாலாற்று வெள்ளத்தில் தவறி விழுந்து அடித்து செல்வதாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனுக்கு சனிக்கிழமை நண்பகல் 1.30 மணியளவில் தகவல் வந்துள்ளது.

அதன்பேரில் கோட்டாட்சியா் பூங்கொடி, வட்டாட்சியா் ஆனந்தன் தலைமையில், ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினா்,காவல் துறையினா் விரைந்து சென்று இளைஞரை பத்திரமாக மீட்டனா்.

விசாரணையில் அவா் திருமலைச்சேரி கிராமம் அணைக்கட்டு இலங்கைத் தமிழா் குடியிருப்பு முகாம் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (28) என்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், மீட்கப்பட்ட இளைஞருக்கு அறிவுரை கூறினாா். மேலும், பிரகாஷை காப்பாற்ற முயற்சித்த சாத்தம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த காமேஷை பலரும் பாராட்டினா்.

பாலாற்றில் அதிகமாக தண்ணீா் வருவதால் பொது மக்கள் யாரும் பாலாற்று பகுதிக்கு வரவேண்டாம் என்று ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT