ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தங்க அங்கி அலங்காரமும் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவருக்கு யாக சாலை பூஜை செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவ வைபவம் நடைபெற்றது.
ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவ விழாவில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.